Categories
தேசிய செய்திகள்

”நான் தோல்வியடைந்த தொழிலதிபர்” முன்னாள் முதல்வரின் மருமகனின் கடைசி கடிதம் …!!

நான் தோல்வியடைந்த தொழிலதிபர் என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வரின்  மருமகன்  சித்தார்த்தா தனது கடைசி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், காஃபி டே நிறுவனருமான விஜி சித்தார்த் காணாமல் போயுள்ளார். விஜி சித்தார்த்தை கடைசியாக நேத்ராவதி ஆற்றின்  அருகே கண்டதாக சிலர் தெரிவித்தனர்.மேலும் விஜி சித்தார்த்தை தொலைபேசியும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஆற்றில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீஸார் தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் அவர் நேற்று காப்பீடு நிறுவனத்திற்கு எழுதிய கடிதம் தற்போது சமூக வலைதளங்களில்வைரலாகி வருகின்றது.  இந்த கடிதத்தில், என்னுடைய 37 வருட கடின உழைப்பிற்குப் பின்னும் என்னால் அபாரமான தொழில் முறையை கையாள முடியவில்லை. நான் முதலில் நேரடியாக 30,000 வேலைவாய்ப்புகளை கொடுத்தும் என்னால் லாபகரமான தொழிலுக்கான வழியை கண்டுபிடிக்க முடியவில்லை எனவே அனைவரையும் கைவிட்டதற்கு நான் மிகவும் வருந்துகின்றேன்.

பங்குகள் தொடர்பாக விவகாரத்தில் நமது நிறுவனத்தின் தொழில் சார்ந்த பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை நிறுத்திவைத்ததோடு அதன் பரிவர்த்தனையை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி எனக்கு நிறைய நெருக்கடி ஏற்பட்டது.இது தொடர்பாக அனைத்து சட்ட நடவடிக்கை அனைத்தும் என் மீது எடுக்க வேண்டும், யாரையும் ஏமாற்ற வேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல நான் ஒரு தோல்வியடைந்த தொழிலதிபர் என்று அந்த கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |