தூத்துக்குடி எம்பி கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடுத்த தேர்தல் வழக்கு மனுவை வாபஸ் பெற தமிழிசைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வழக்குகள் தொடரப்பட்டது. ஓன்று கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் மற்றொன்று சந்தனகுமார் என்ற வாக்காளர் தரப்பில் ஒரு தேர்தல் வழக்கு தொடரப்பட்டது . இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது அரசு பதவியில் இருப்பதால் ( தெலுங்கானா ஆளுநர் ) கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தமிழிசை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை வாபஸ் பெறும் முடிவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக அரசிதழில் வெளியிடுவதற்கு அறிவுறுத்தினார். அதன்படி கடந்த 9ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. அது தொடர்பான அறிக்கை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த அறிவிப்பை ஒரு தமிழ் நாளிதழ் மற்றும் ஆங்கில நாளிதழில் விளம்பரமாக வெளியிட வேண்டும் என கூறி நீதிபதி வழக்கை அடுத்த மாதம் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.