மௌன விரதம் இருக்க போவதாக பிரகாஷ்ராஜ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
பிரகாஷ்ராஜ் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர். இவர் சமீபத்தில், ரஜினி நடிப்பில் வெளியான ”அண்ணாத்த” மற்றும் சூர்யா நடித்த ”ஜெய்பீம்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் மருத்துவ பரிசோதனை செய்துள்ளார். அப்போது மருத்துவர்கள் இவரிடம் குரல்வளைக்கு ஓய்வு கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். பிரகாஷ்ராஜ் இதனை, ”டாக்டரிடம் முழு பரிசோதனை செய்து கொண்டேன். என் குரல் வளையங்களுக்கு மட்டும் ஒரு வாரம் முழு ஓய்வு தேவை. எனவே, மௌன விரதம் இருக்க போகிறேன்” என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
Had a complete check up with the doctors.. I’m rocking .. only my vocal chords need complete rest for a week. So “Mouna vratha “ .. will bask in silence..Bliss
— Prakash Raj (@prakashraaj) November 15, 2021