Categories
மதுரை மாநில செய்திகள்

“எய்ம்ஸ் அமைக்கும் பணியில் தொய்வு இல்லை” அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி..!!

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியில் எவ்வித சுணக்கமும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசின் ஒப்புதலுடன் ரூ.1,264 கோடி ஒதுக்கியதை _ யடுத்து மதுரை தோப்பூரில் அதற்க்கான பணி நடைபெற்று வருகிறது. எவ்வித சுணக்கமுமின்றி தொடரும்  பணியையும் , எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தையும் ஆய்வு செய்வதற்காக வருகின்ற 10_ஆம் தேதி முதல் 15_ஆம் தேதி வரை டெல்லி மற்றும் ஜப்பானில் இருந்து 8 பேர் கொண்ட தொழில்நுட்ப குழுவினர் வர இருக்கின்றது.

மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மாநில அரசு இதுவரை எந்த நிலத்தையும்   ஒப்படைக்கவில்லை என்று  RTI_யில்  தகவல் வெளியானது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், மதுரையில் உள்ள தோப்பூரில் அமைய இருக்கும்   எய்ம்ஸ் மருத்துவமனை பணியில் எந்த வித தொய்வும் இல்லை என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் இல்லை என்று கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர்  இதே நிலை தொடர நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |