விஜய் – அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த வாரம் வெளியானது. இந்த ட்ரைலர் வெளியானது முதல் தற்போது வரை மூன்று கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டுள்ளனர். மேலும் ட்ரைலரை பார்த்த பல்வேறு பிரபலங்களும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அதுமட்டுமல்லாது இரண்டு வேடங்களில் விஜய் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்துவருகிறது. இந்தப் படம் தீபாவளிக்கு முன்பாக அக்டோபர் 25ஆம் தேதி ரிலீஸாகும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பிகில் திரைப்படத்தின் ட்ரைலரை பார்த்த பிரபல பெண் பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா, அந்த ட்ரைலரை புகழ்ந்து தள்ளி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், பிகில் படத்தின் ட்ரைலரை பார்த்தபோது அது தனக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. என்னவொரு தாக்கம் அதில் உள்ளது. அட்லி சிறந்த வேலையை செய்துள்ளீர்கள். என்னால் படத்திற்காக காத்திருக்க முடியாது என பதிவிட்டிருந்தார்.
இந்தியாவின் முதல் பெண் தேசிய ரேஸிங் சாம்பியன் என்ற பெருமையை பெற்ற அலிஷா அப்துல்லா கடந்த மாதம் பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, தான் ஒரு திவிர விஜய் ரசிகை என்பதை குறிப்பிட்டிருந்தார்.பெண்களில் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் பிகில் திரைப்படத்தில் விஜய் உடன் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்தராஜ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Watched the trailer of #bigil #BIGILMostLikedIndianTrailer
It gave me goosebumps… what a powerful impact through a trailer.. all the very best @Atlee_dir you have done an amazing job.. I can’t wait for the movie ⏱⏱ @actorvijay— Alisha abdullah (@alishaabdullah) October 17, 2019