பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீரென்று உக்ரைன் நாட்டிற்கு சென்றதால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கடும் கோபமடைந்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், தனது ஆலோசகர்களிடம் உக்ரைன் விவகாரம் தொடங்கப்பட்டதிலிருந்து போரிஸ் ஜான்சன் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், தான் பெரிதாக எதையோ செய்துவிட்டது போன்று அவர் தன்னை காண்பித்து கொள்வது எரிச்சலூட்டுகிறது என்று கூறியிருக்கிறார்.
அதாவது, பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நாளை நடக்கவிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டிற்கு ரகசிய பயணம் மேற்கொள்ளத் மேக்ரோன் திட்டமிட்டுள்ளார்.
தான் தற்போது இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் என்பதை காண்பிப்பதற்காகவும் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தனக்கு ஆதரவை அதிகப்படுத்திக் கொள்வதற்காகவும் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால், அதற்குள் திடீரென்று போரிஸ் ஜான்சன் உக்ரைன் நாட்டின் தலைநகருக்கு சென்றுவிட்டார். எனவே, தன் திட்டம் நிறைவேறாமல் போனதால் மேக்ரோன் கடும் கோபமடைந்துள்ளார்.