Categories
உலக செய்திகள்

இரண்டாம் முறையாக…. ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரான்…. உலகத்தலைவர்கள் வாழ்த்து…!!!

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் இமானுவேல் மேக்ரான் மீண்டும் வெற்றியடைந்ததற்கு மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்கள்.

பிரான்ஸில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் தற்போது ஜனாதிபதியாக இருக்கும் இமானுவேல் மேக்ரான் 58.8% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். எனவே அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்கவிருக்கிறார். இரண்டாம் தடவையாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற மேக்ரானுக்கு உலக தலைவர்கள் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், பிரான்சில் மீண்டும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். ஜெர்மன் நாட்டின் ஜனாதிபதியான ஓலாப் ஸ்கோல்ஸ், எங்களது ஒத்துழைப்பை மேலும் தொடருவோம் என்பதற்காக மகிழ்ச்சி கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரான்ஸ் ஜனாதிபதியாக மீண்டும் வெற்றி பெற்ற இமானுவேல் மேக்ரோனுக்கு என் வாழ்த்துக்கள். பிரான்ஸ் எங்களுக்கு நெருக்கமான, முக்கிய கூட்டாளிகளில் ஒன்றாக இருக்கிறது. உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து பணிபுரிவோம் என்று கூறியிருக்கிறார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ, எங்கள் நாடு மற்றும் பிரான்ஸில் இருக்கும் மக்களுக்கு ஏற்படும் மிக முக்கிய பிரச்சனைகளில், எங்களுக்கான பணியை மேலும் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |