இம்மானுவேல் சேகரனுக்கு இன்று நினைவு நாள், பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை…!!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றும், மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்பினருக்கு மட்டுமே அனுமதி அழைக்கப்படுவதாகவும் ராமநாதபுரம் ஏடிஜிபி திரு ஜெயந்த் முரளி தெரிவித்துள்ளார். மேலும் அங்கு நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார். பரமக்குடியில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.