Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆபாச படம் பதிவேற்றம்” காவல்துறை உடனடி நடவடிக்கை….. வடமாநில இளைஞர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது….!!

கோவையில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றம்  செய்த வடமாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி குழந்தைகளின் ஆபாசப்படங்களை பார்ப்போர் பதிவிறக்கம் செய்வோர் இணையதளத்தில் ஏற்றுவோர் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஒரு சிலர் ஏற்கனவே இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடமாநில இளைஞர் ஒருவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். 

ரெண்டா என்னும் இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் பொள்ளாச்சி to பாலக்காடு சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது பணி இடைவெளி நேரத்தில் தனது முகநூல் பக்கத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை அப்லோட் செய்துள்ளார்.

இதனை கண்காணித்த கோயம்புத்தூர் சமூக ஊடகப் பிரிவினர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த நபர் குறித்து புகார் தெரிவித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் தனக்கு ஆபாச படம் பார்க்கும் பழக்கம்  இருப்பதாகவும், குழந்தைகளின் ஆபாசப்படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தனது நண்பர்கள் சிலரும் இதுபோன்ற ஆபாச படங்களை தனக்கு பகிர்ந்துள்ளதாக அவர் கூறியதை அடுத்து அவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் அவரை சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |