Categories
மாநில செய்திகள்

மண்ணெண்ணெய் ஆட்டோக்களுக்கு உடனடி தடை……. காற்று மாசை தவிர்க்க அதிரடி நடவடிக்கை….!!

பீகாரில் காற்று மாசினை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

டெல்லியை போல பீகார் மாநிலமும் காற்று மாசினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை குறைக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதுகுறித்து அம்மாநில தலைமைச் செயலாளர் தீபக் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வாகனங்கள் இயக்கப்படுவதற்கு தடை விதிக்கப்படுவதாக கூறினார்.

Image result for பீகாரில் காற்று மாசு

மேலும் பாட்னா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சரக்கு வாகனங்கள் இயக்கவும் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார். இதுகுறித்து போக்குவரத்து துறை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வாகனங்களால் 30 விழுக்காடு அளவிற்கு காற்று மாசுபடுவதாக கூறிய அவர் தமது உத்தரவை பின்பற்றினால் சாதகமான சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் மண்ணெண்ணய் மூலம் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று தீபக் குமார் தெரிவித்தார்.

Categories

Tech |