Categories
மாநில செய்திகள்

உடனே அனைவரும் இந்த செய்தியை ஷேர் செய்யவும்… முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்..!!

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் கொரோனா பாதித்தவர்களுக்கு பல நிறுவனங்களும் தங்களால் இயன்ற அளவுக்கு உதவியை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா நிவாரணத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டும் என்று விரும்பும் பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் நன்கொடை முழுவதும் கொரோனா எதிர்ப்பு பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். பெறப்பட்ட நன்கொடை மற்றும் மேற்கண்ட செலவு ஒளிவுமறைவின்றி பொதுவெளியில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |