வெளிநாட்டில் மருத்துவம் படித்து காத்திருக்கும் 500 பேரும் உடனடியாக மருத்துவப் பணியைத் தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க பல மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகின்றது. இவற்றை சரி செய்வதற்காக வெளிநாட்டில் மருத்துவம் படித்த 500 பேரும்
மருத்துவ பணியை தொடங்கலாம் என்று தற்போது தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்பெல்லாம் வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் பயிற்சியின்போது ரூபாய் 5 லட்சம் செலுத்த வேண்டும். அதைத்தொடர்ந்து மருத்துவ கல்வி இயக்குநரகம் கீழ் ஓராண்டு பணிபுரியும் நபர் மட்டுமே மருத்துவ பணி மேற்கொள்ள முடியும். ஆனால் தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் வெளிநாட்டில் படித்த 500 பேருக்கும் உடனடி அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.