Categories
உலக செய்திகள்

இங்க இதுதான் நடக்கும்..! சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்வோர்… பிரபல நாட்டில் பரபரப்பு தகவல்..!!

பிரித்தானியாவுக்குள் படகுகள் வழியாக நுழையும் புலம்பெயர்வோருக்கு அந்நாட்டில் என்ன நடக்கும் என்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஆங்கிலக்கால்வாய் வழியாக படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் வரும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை சமீப காலங்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இவ்வாறு பிரித்தானிய அதிகாரிகளிடம் கடல் பரப்பில் சிக்குபவர்களும், புலம்பெயர்பவர்களும் முதலில் எல்லை பாதுகாப்புப்படையின் பரிசீலனை மையத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். பின்னர் அங்கு அவர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்களா, அவர்களுக்கு மருத்துவ உதவி ஏதேனும் தேவைப்படுகிறதா என்பது சோதிக்கப்பட்டு பின்பு உணவு வழங்கப்படுகிறது.

மேலும் வயதானவர்கள் பிரித்தானியாவில் உள்ள தங்கும் மையத்திற்கு நேர்காணலுக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதேபோல் அவர்களுக்கு வாரம் ஒன்றுக்கு 37.75 பவுண்டுகள் உடை, உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக வழங்கப்படுகிறது. இதையடுத்து புலம்பெயர்வோர்களின் புகலிட கோரிக்கை பரிசீலிக்கப்படும் வரை அந்த மையத்தில் அவர்கள் காத்திருக்க வேண்டும். அதேசமயம் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டால் அவர்கள் பிரித்தானியாவிற்கு எந்த நாட்டிலிருந்து வந்தார்களோ அந்த நாட்டிற்கே மறுபடியும் நாடு கடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே புலம்பெயர்வோரில் பெரியவர்கள் யாரும் இல்லாத குழந்தைகளாக இருப்பின் அவர்கள் முதலில் Kent county council-ன் பொறுப்பில் ஒப்படைக்கப்படுவர். இந்த திட்டத்தில் சில உள்ளூர் அமைப்புகளும் உதவும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிரித்தானிய அமைச்சர்கள் இந்த திட்டத்தை மாற்றி தற்போது புலம்பெயர்வோரை அல்பேனியா போன்ற நாட்டிற்கு அனுப்பி வைக்க திட்டமிட்டு வருகின்றனர்.

Categories

Tech |