Categories
உலக செய்திகள்

“சபாஷ், அருமை!”…. இனி ஒழிஞ்சது ஓமிக்ரான்….. நோய் எதிர்ப்புப்பொருள் கண்டுபிடிப்பு…..!!

ஓமிக்ரோன் போன்ற உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றுக்களை அழிக்க நோய் எதிர்ப்பு பொருளை அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனாவின் புதிய வகை மாறுபாடான ஓமிக்ரான் தொற்று தற்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் பரவிக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த ஓமிக்ரான் வைரஸின் ஸ்பைக் புரதத்தில் 37 உருமாற்றங்கள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை இதற்கு முன் உருமாற்றமடைந்த வேறு எந்த வைரஸிலும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஓமிக்ரான் இந்த உருமாற்றங்களை பயன்படுத்தி எளிதில் மனிதர்களின் செல்களுக்குள் நுழைவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இவை தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாத தன்மையை உடையது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் இவற்றை ஒழிக்க நோய் எதிர்ப்பு பொருளை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுமட்டுமன்றி உருமாற்றம் அடைந்த பிற வைரஸ்களையும் தடுக்க இந்த நோய் எதிர்ப்பு பொருள் பயன்படும் என்று கூறியிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இருக்கும் மருத்துவ கல்லூரி பேராசிரியர் டேவிட் வீஸ்லர் இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது, “ஸ்பைக் புரதத்தின்  பாதுகாக்கப்பட்ட தளங்களை பாதிக்கும் ஆன்டிபாடிகளில், கவனமாக இருந்து, வைரஸ்  அடுத்தடுத்து, பரிணாமத்தை கடப்பதற்கு வழி உள்ளது என்று கண்டறிந்தோம்.

பல வகை தொற்றுகளில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளை கண்டுபிடித்து, அவற்றை ஆன்டிபாடிகளால் அழிக்க முடியும் என்ற கண்டுபிடிப்பு, இந்த பகுதிகளை தாக்கும், தடுப்பூசிகள் மற்றும் ஆன்டிபாடி சிகிச்சைகளை உருவாக்க உதவும். இது அதிக வகையான மாறுபாடுகளை எதிர்த்து செயல்படும்” என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |