Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெய்”… எந்தெந்த வயதினர் எவ்வளவு சாப்பிடவேண்டும்…?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கண்களைப் பாதுகாக்க தினசரி உணவில் நெய் சேர்த்துக் கொள்ளுதல் மிகவும் நல்லது.

நெய்யை  தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதாம். நெய்யில்  இருக்கும் ஆரோக்கியமான அமிலம், வைட்டமின் b2, வைட்டமின் வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது.

இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இதனால் உடலின் மூலை ரத்தம், நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இது பயன்படுகிறது.

எண்ணெயில் கொழுப்புகள் இருந்தாலும், சமையலுக்கு பயன்படுத்தும் பிற எண்ணெய்களை விட குறைந்த அளவில் கொழுப்பு உள்ளது.

பருவ வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் தினமும் இரண்டு கரண்டி நெய் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தினமும் மூன்று கரண்டி நெய் சாப்பிட வேண்டும்.

2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம்.

3 முதல் 9 வயது உள்ள குழந்தைகளுக்கு மூன்று தேக்கரண்டி அளவு உள்ள நெய்யை கொடுக்க வேண்டும்.

10 வயது முதல் 17 வயதுள்ள இளம் பருவத்தினருக்கு நான்கு தேக்கரண்டி வரை கொடுக்கலாம்.

நெய்யில் பசு எருமை நெய் இரண்டுமே உடலுக்கு நன்மையை சேர்க்கும். நெய்யில் உள்ள வைட்டமின் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்த உதவி செய்கிறது.

Categories

Tech |