Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சட்னி !!!

புடலங்காய் சட்னி

தேவையானபொருட்கள் :

 

சின்னவெங்காயம் –  10

தக்காளி – 1

வரமிளகாய் – 3

புடலங்காய் – 1

புளி – சிறிது

நல்லெணெய் – தேவைக்கேற்ப

உளுந்தம்பருப்பு – 1 ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க :

கடுகு – 1/4 ஸ்பூன்

பெருங்காயத்தூள் – சிறிது

வரமிளகாய் – 2

கறிவேப்பிலை –  தேவைக்கேற்ப

புடலங்காய்சட்னிக்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் புடலங்காயை தோல் நீக்கி , விதைகளுடன் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும் .ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்தம்பருப்பு சேர்த்து வறுத்து அதனுடன் சின்னவெங்காயம்  , வரமிளகாய் ,  தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும் . பின் இதனுடன் நறுக்கிய புடலங்காய், உப்பு    மற்றும் புளி சேர்த்து நன்கு வதக்கி வேகவிட வேண்டும் . வெந்தவுடன் ஆறவைத்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , வரமிளகாய் ,பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டினால் சுவையான புடலங்காய் சட்னி தயார் !!!

Categories

Tech |