சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியர்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தும் ரசத்துக்கு நோய்களை குணமாக்கும் சக்தி உள்ளதால் சீனாவில் ரசம் மருந்தாக பயன்படுத்தப்பட்டது. இந்த ரசத்தை தயாரிக்கும் முறைகள் குறித்து இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள் :
புளி – சிறிய எலுமிச்சை அளவு,
தக்காளி – 3,
மிளகு -1 ஸ்பூன்,
சீரகம் – 1/2 ஸ்பூன்,
பூண்டு – 8 பல் (சிறியது),
கருவேப்பிலை – 2 கீற்று,
கொத்தமல்லி இலை – சிறு கைபிடி அளவு,
மஞ்சள் தூள் – தேவையான அளவு.
தாளிக்க :
கடுகு – ¼ டீஸ்பூன்,
சீரகம் – ¼ டீஸ்பூன்,
வெந்தயம் – ¼ டீஸ்பூன்,
பெருங்காயம் – சிறிதளவு,
நல்லெண்ணெய் – தேவையான அளவு ,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- முதலில் புளியை தேவையான தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். மிளகு, சீரகத்தை நன்கு பொடித்துக் கொள்ளவும். அதனுடன் பூண்டு, கருவேப்பிலை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- புளிக் கரைசல், அரைத்த தக்காளி விழுது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை இவை மூன்றையும் ஒன்றாக கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து தாளிக்கவும்.
- இதனுடன் அரைத்த மிளகு சீரகக் கலவையை சேர்த்து சிறிது நேரம் வதக்கி பெருங்காயத்தூள் சேர்க்கவும். உடன் தேவையான மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்தவுடனே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கி விடவும்.