லிங்க முத்திரை பற்றிய நன்மைகளை இதில் தெரிந்து கொள்வோம்.
நம் உடம்பில் சளி அதிகமாகும் பொழுது அது காச நோயாக மாறி உயிருக்கு ஆபத்தை தருகிறது. மேலும் அடிக்கடி காய்ச்சல் வந்து விடுவதற்கு காரணம் சளி அதிகமாவது தான். சிந்தனை தெளிவாக இருக்காது. வாழ்க்கையில் ஒரு உற்சாகமாக இருக்காது. உடலில் முதுகில், கழுத்து முதுகெலும்பில் வலி ஏற்படுகின்றது. இவ்வளவு உடல் உபாதை தரும் சளியை இந்த முத்திரை போக்கும்.
செய்முறை:
முதலில் நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் தரையில் ஒரு விரிப்பு விரித்து பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமர வேண்டும்.முதலில் முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். இருநாசித் துவாரத்தின் மூலமாக மெதுவாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். ஒரு நிமிடம் இவ்வாறு செய்ய வேண்டும்.
பின்பு இரண்டு கை விரல்களையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டு இடக்கை கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் அனைத்தையும் படத்தில் உள்ளது போல் அழுத்தி இறுக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த முத்திரையை பத்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடங்கள் செய்து வரலாம்.
முதலில் ஐந்து நிமிடங்கள் செய்யவும். படிப்படியாக பத்து நிமிடங்கள் செய்யலாம். பின்பு ஒரு மாதத்தில் பதினைந்து நிமிடங்கள் செய்யலாம். இந்த முத்திரையில் இரண்டு கை விரல்களையும் இணைக்கும் பொழுது அக்கு பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. குறிப்பாக நமது உடலின் சூடு அதிகமாகி உடலில் உள்ள சளியை வெளிக் கொணர்கின்றது.
மற்ற பலன்கள்:
சுவாசப்பை நுரையீரல் வலுப்படும்.
உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.
உடல் அதிக எடை குறையும்.
அடிக்கடி காய்ச்சல் வருவது குறைந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.