Categories
லைப் ஸ்டைல்

“நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும் நில முத்திரை”… தினமும் 30 நிமிடம் பண்ணுங்க… ரொம்ப நல்லது..!!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நில முத்திரையை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

மோதிர விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் சேரும்போது நிலமுத்திரை உண்டாகும். கட்டைவிரல் நெருப்பை குறிக்கும். மோதிர விரல் ‘மண்’ மூலம் பொருளை குறிக்கும். இது மண் சக்தியை அதிகமாக்கி நெருப்பின் சக்தியை குறைக்கும். மண் சக்தி அதிகமாகும் போது நமது எலும்புகள், கார்டியாலஜி, தோல், தலைமுடி நகம், தசைகள் ,உள்ளுறுப்புகள் அனைத்தும் சக்தி கிடைக்கும். உடலில் சக்தியும் அதிகரிக்கும்.

நோய் தடுப்பு சக்தியையும் அதிகமாகி உடல் நலத்தை பாதுகாக்கும். உடல் பலவீனமாக உள்ளவர்கள். ரத்தம் குறைவாக உள்ளவர்கள், இந்த முத்திரையை தினமும் 30 நிமிடம் செய்து வர உடலுக்கு சக்தி கிடைக்கும். மாதவிடாய் பிரச்சனை போய் எடை குறைய தினமும் காலை மாலை நடைப் பயிற்சியும், இயற்கை உணவும், தினமும் 30 நிமிடம் செய்ய வேண்டும்.

எலும்புகளின் அடர்த்திக்குறைவை நீக்கும்.  எலும்புகளுக்கும், மூட்டுகளுக்கும் சக்தி கொடுக்கும். இந்த முத்திரையை வைத்துக்கொண்டு சில நிமிடங்களிலேயே தூக்கமின்மையை நீங்கி தூக்கம் கண்களை தழுவும். உடலில் பலவீனத்தை போக்கி எடையை அதிகரிக்கும். இம்முத்திரையை ஒரு வேளைக்கு 15 நிமிடங்கள் என்று 45 நிமிடங்கள் செய்யலாம். தைராய்டு சுரப்பிகளின் அதிகப்படியான சுரப்பைக்குறைக்கிறது.

Categories

Tech |