இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார்.
மேலும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு 140 கோடி மிச்சமாகும். பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் கொரோனாவால் மிகப் பெரும் சேதத்தை சந்தித்திருக்க நேர்ந்திருக்கும். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கொரோனா காலத்தில் பணியாற்றிய முன் களப் பணியாளர்களுக்கு நன்றி” என அவர் தெரிவித்துள்ளார். இயதையடுத்து மத்திய பட்ஜெட் ஒவ்வொன்றாக தாக்கல் செய்தார்.
வரித்தணிக்கை வரம்பு ரூபாய் 5 கோடியில் இருந்து ரூபாய் 10 கோடி ரூபாயாக உயர்வு. பெரிய அளவில் வரி ஏய்ப்பு கண்டுபிடித்தால் மட்டுமே 10 வருட பழைய வருமான வரி கணக்கு ஆய்வு செய்யப்படும். 3 ஆண்டுகளுக்கு பிறகு பழைய வருமான வரி கணக்குகள் மீண்டும் ஆய்வு செய்யப்படாது. தங்கத்துக்கான இறக்குமதி வரி 12.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைப்பு.