Categories
உலக செய்திகள்

இந்தியா பல நாடுகளையும் மிஞ்சிவிட்டது..! மருத்துவ பொருட்களுக்கான இறக்குமதி வரி… வெளியான பகீர் தகவல்..!!

உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனா தொடர்பான மருத்துவ பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிக அளவில் வசூலிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது 7 மடங்கும், சீனாவுடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்கும் அதிகமான இறக்குமதி வரியை இந்தியா விதித்துள்ளது. இந்த உண்மையானது மும்பையில் உள்ள இந்திரா காந்தி மேம்பாட்டு நிறுவனம் ஆய்வு மேற்கொண்ட போது தெரியவந்துள்ளது. உதாரணமாக இந்திய அரசு 15.2 சதவீதம் இறக்குமதி வரியை கொரோனா தொடர்பான மருத்துவ பொருள்களுக்கு விதிக்கிறது. அமெரிக்காவை ஒப்பிடும் போது ஏழு மடங்கு அதிகமாகவும், சீனாவை ஒப்பிடும்போது இரண்டு மடங்கு அதிகமாகவும் இறக்குமதி வரியை இந்தியா விதிக்கிறது.

வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற வருவாய் குறைவான நாடுகளை விட இந்தியாவில் இறக்குமதி வரி 60 சதவீதம் அளவிற்கு அதிகம் உள்ளதாக ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சுத்தப்படுத்தும் பொருள் மற்றும் கிருமிநாசினி உள்ளிட்டவைகளுக்கு இறக்குமதி வரியை இந்திய ஒன்றிய அரசு 55.8 சதவீதம் விதித்திருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் இறக்குமதி வரி 2% மட்டும் தான், சீனாவிலும் இறக்குமதி வரி வெறும் 11.5 சதவீதம் தான், அதேபோல் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளும் இறக்குமதி வரியை 17.5 சதவீதம் மட்டுமே வசூலித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |