மத்திய நுகர்வோர் நலன் மற்றும் பொது விநியோக அமைச்சகம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி குறிப்பிட்ட சில சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி தீர்வைகளில் சலுகை வழங்கப்பட்டது. உலக அளவில் தற்போது கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி மற்றும் இறக்குமதி தீர்வை குறைப்பு போன்றவற்றால் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணையின் சில்லறை விற்பனை விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது.
அதன்பிறகு சுத்திகரிக்கப்பட்ட, சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி எண்ணெய், கச்சா, சுத்திகரிக்கப்பட்ட சோயா பீன் எண்ணெய், ஆர்பிடி பாமாயில், ஆர்பிடி பாமாலின், சுத்திகரிக்கப்படாத கச்சா பாமாயில் போன்றவர்களுக்கு தற்போது நிர்ணயிக்கப்பட்ட தீர்வு காண சலுகை அடுத்த வருடம் மார்ச் 31-ஆம் தேதி வரைக்கும் நீடிக்கும். இதற்கான வேளாண் சமூக நலத்திட்ட கூடுதல் வரி 5.5 சதவீதமாக இருக்கும். இதேபோன்று சுத்திகரிக்கப்படாத பாமாலினுக்கு 13.75%, சோயா எண்ணெய்க்கு 19.25% நிகர வரியாக இருப்பது தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.