ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் முகக்கவசங்கள் கொரோனா காலகட்டத்தில் எவ்வாறு நம்மை காக்கிறது என்று விளக்கியுள்ளார்கள்.
ஜெர்மனியிலுள்ள Mainz என்ற நகரில் இருக்கும் Max Planck என்ற வேதியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸிலிருந்து, முகக்கவசம் எவ்வாறு மக்களை காக்கிறது என்பது தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஆய்வின் முடிவுகளை தெளிவாக கண்டறிந்துள்ளார்கள்.
அதாவது மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் தும்மல் மற்றும் இருமல் மூலமாக வெளியேறும் சிறு துளி எச்சிலினால் கொரோனா பரவும் என்பது அனைவரும் அறிந்தது. அந்த நிலையில் தான் சாதாரண முகக்கவசம் தொற்றிலிருந்து நம்மை காத்து விடுகிறது என்று ஆராய்ச்சி குழுவின் தலைவர் Yafang Cheng கூறியிருக்கிறார்.
அதே சமயத்தில் மருத்துவமனை உள்ளிட்ட அபாயம் மிகுந்த இடங்களில் N95/FFP2 ஆகிய முகக்கவசங்களை உபயோகிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் மருத்துவமனைகளில் உபயோகிக்கக்கூடிய சாதாரணமாக முகக்கவசங்களும் திறன் உடையவையாக உள்ளன என்றே கூறுகின்றனர்.
மேலும் தடுப்பூசி என்பது மிக முக்கியமானது. ஆனால் முகக்கவசம் தொற்றிலிருந்து நம்மை காக்கக்கூடிய முக்கிய கருவியாக செயல்படுகிறது என்று கூறுகிறார்கள். மேலும் கொரோனா மட்டுமின்றி காற்றினால் பரவும் பிற கிருமிகளிடமிருந்தும் நம்மை முகக்கவசங்கள் காக்கிறது என்று தெரிவித்துள்ளார்கள்.