Categories
உலக செய்திகள்

இவங்கள தனிமைப்படுத்த அவசியம் இல்ல..! பிரபல நாட்டில் முக்கிய அறிவிப்பு… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்..!!

கொரோனா தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்டவர்கள் கனடாவிற்கு திரும்பும் போது கொரோனா இல்லை என்பதற்கான பரிசோதனை ஆவணத்தை சமர்ப்பித்தால் அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் என்பது அவசியம் இல்லை என்று அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கனடாவில் உரிமம் பெற்று வாழ்பவர்களும், கனேடியர்களும் கனடாவிற்கு சொல்லும் போது கொரோனா தடுப்பூசியை 14 நாட்களுக்கு முன்னதாகவே செலுத்தியிருக்க வேண்டும். மேலும் 2 டோஸ் தடுப்பூசியையும் போட்டுக் கொண்டவர்கள் கொரானா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை கனடா பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட தகுந்த ஆவணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

அதன் பிறகு கனடாவில் மீண்டும் ஒரு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அப்போது அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தபடுவார்கள், அதேசமயம் கொரோனா இல்லை என்றால் அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் என்பது அவசியமற்ற ஒன்று என்றும், இவை ஜூலை மாதம் 5-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Categories

Tech |