Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குண்டு வெடிப்பு வழக்கு நிலுவை… பிடிபட்ட முக்கிய குற்றவாளி… போலீஸ் கமிஷ்னரின் அதிரடி உத்தரவு…!!

குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை திருட்டு வழக்கில் கைது செய்ய கமிஷ்னர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாளம் பகுதியில் சுராஜ் என்ற நகை வியாபாரி வசித்து வருகிறார். இந்நிலையில் சுராஜ் தனது மோட்டார் சைக்கிளில் பெரியமேடு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு கும்பல் அவரை வழிமறித்தது. அதன்பின் அந்த மர்ம கும்பல் சுராஜ் வைத்திருந்த 882 கிராம் தங்க நகைகள், தங்க கட்டிகள் மற்றும் 7 1/2 லட்ச ரூபாய் பணம் போன்றவற்றை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சுராஜ் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சபியுல்லா என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 6 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் காவல்துறையினர் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ரபி என்பவரை தீவிரமாக தேடி வந்தனர். இவர் மீது சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளது. அதோடு நீதிமன்றம் ரபியை பிடிப்பதற்கு வாரன்ட் அளித்துள்ளது. இதனை அடுத்து கமிஷனர் சங்கர்ஜிவால் ரபியை பெரியமேடு திருட்டு வழக்கில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்படி தனிப்படை காவல்துறையினர் திருவொற்றியூரில் பதுங்கியிருந்த ரபியை அதிரடியாக கைது செய்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் அவரிடம் இருந்த கார், மோட்டார் சைக்கிள் மற்றும் 74 கிராம் எடையுள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |