பெரியாரின் முழு வாழ்க்கையை இன்று ஒருநாளில் சொல்லி முடிக்க முடியாது ஆகையால் அவர் வாழ்வில் நடந்ந்த சில முக்கிய சம்பவங்களை இந்த செய்தித்தொகுப்பில் காண்போம்.
1879 பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியா கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலம் ஈரோட்டில் வெங்கட நாயக்கர் என்பவருக்கும் சின்னத்தாயம்மாள் என்பவருக்கும் இரண்டாவது மகனாக பிறக்கிறார் நமது ஈவேராமசாமி. ஈவே ராமசாமி பிறந்த குடும்பம் கடவுள் மற்றும் கடவுள் மீதான நம்பிக்கையும் அதிகம் கொண்ட ஒரு குடும்பமாக இருந்தது. ஆனால் அவர் வளர்ந்தது நாத்திகம் சம்பந்தமாக தான்.
ஏறத்தாள ஆறு வயதில் திண்ணைப் பள்ளியில் கொண்டு போய் இவரை சேர்க்கிறார்கள் இவரது பெற்றோர்கள். 4 வருடம் படிக்கிறார் பின் போதுமென்று திண்ணைப் பள்ளியில் இருந்து வெளியே வருகிறார். சின்ன வயதில் என்ன செய்கிறார் என்றால் வீட்டிற்கு ஆன்மீக சொற்பொழிவு ஆற்ற நிறைய பேர் வருகிறார்கள் அவர்களை வழிமறித்து நிறைய குதர்க்கமான கேள்விகள் நக்கலான கேள்விகளை எல்லாம் கேட்க ஆரம்பித்தார்.
அதற்கு அவர்கள் பதில் சொல்லாமல் திணறியபடி செல்வார்கள் தனது பன்னிரண்டாவது வயதில் அப்பாவுடைய வண்டி கடையில் வேலைக்கு செல்கிறார். நன்கு உழைத்து அப்பாவிற்கு பெருமை சேர்த்ததோடு பணத்தையும் சேர்த்தார்.தனது 19 ஆவது வயதில் திருமணம் செய்து கொள்கிறார் பெரியார். இரண்டு வருடங்களுக்கு பிறகு பெண் குழந்தை ஒன்று பெரியாருக்கு பிறக்கிறது. ஆனால் பிறந்த ஐந்து மாதத்தில் குழந்தை இறந்துவிடுகிறது. அதற்குப் பிறகு தனது இறுதிக்காலம் வரை பெரியாருக்கு குழந்தைகளே இல்லை.
இவரது போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக தொடரும் காலகட்டமும் அதுதான். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அனைத்து மக்களுக்கும் சமபந்தி போஜனம் நடத்த பெரியார் முன்வருகிறார் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார். இதனால் அவரது தந்தைக்கு கோபம் அதிகமாக வந்தது. இதன்காரணமாக கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறினார் ராமசாமி. பின் அவரைத் தேடி கண்டுபிடித்து அழைத்து வந்து நீ தனியாக தொழில் செய்து கொள் என்று அவருக்கு தனியாக மண்டி கடை ஒன்றை அவரது தந்தை வைத்து கொடுத்துவிட்டார்.
அதிலும் வருவாய் ஈட்டி விட்டு தொழிலாளர்களுக்கு நிறைய வருமானம் பிரித்துக் கொடுத்து இருந்தார் பெரியார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கொடுமையான நோய் அனைவரையும் தாக்கி கொண்டு வந்தது அதுதான் பிளேக். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சொந்தத் தாயே தொட்டு தூக்குவதற்கு கொஞ்சம் கஷ்டப் படுவார்கள் ஏனென்றால் அந்த நோய் ரொம்ப கொடூரமாக பரவக்கூடிய நோய் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் ஈவே ராமசாமி எதைப் பற்றி கவலைப்படாமல் அந்த பிள்ளைகளைக் கூட தன் கையில் எடுத்து சுமந்து சென்றார்.
இதனால் அவர் பெயர் ஈரோடு மாவட்டம் முழுமைக்கும் பரவ தொடங்கியது. தொழில்துறை, வணிகத்துறை என எல்லாத்துறைகளிலும் பதவிகள் அவருக்கு கிடைக்கிறது. ஆனால் அனைத்தையும் அவர் ஒரு கட்டத்தில் துறந்து விட்டார். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் பொது வாழ்க்கைக்கு வருவார்கள். அந்த வகையில் 1924 கேரளாவில் வைக்கம் என்ற பகுதியில் ஒரு குறிப்பிட்ட சாதி சமயத்தை சேர்ந்தவர்கள் உயர்ந்த சாதியினர் இடத்தில் நடக்கக்கூடாது கோவிலுக்கு போகக்கூடாது என்று நிறைய எழுதப்படாத சட்டங்கள் இருந்தது.
இதனை எதிர்த்து அந்த ஊர் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது இந்த செய்தி ஈவே ராமசாமி அவர்களின் காதுக்கு வருகிறது. போராட்டத்தில் குதித்தார் பெரியார். பின் கைதுசெய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து 1926 தமிழகத்தில் சுசீந்திரம் பகுதியில் இதே போன்ற ஒரு பிரச்சனை. அதை எதிர்த்து போராடினார் இப்படி ஒவ்வொரு போராட்டமாக தொடங்கி அவரது வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் 1973இல் உடல் நலம் சரியில்லாமல் போக ஆரம்பிக்கிறது.
அதற்கு முன்பாக கூட அவர் உரை ஆற்றிவிட்டே இறந்தார். 1973 டிசம்பர் திங்கள் பெரியார் இயற்கையாக மரணம் அடைகிறார். அப்பொழுது மிகப் பெரிய சர்ச்சை ஒன்று வெடிக்கிறது. பெரியாருடைய மரணத்தை ஒரு அரசு நாளிதழில் பதிவேற்றம் செய்ய முடியுமா இதற்கு விடுமுறை விடலாமா என்று பல கேள்விகளும் குழப்பங்களும் எழுந்தன. அப்போது தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த திரு டாக்டர் கலைஞர் கருணாநிதி பெரியாருடைய இழப்பை அரசாணையில் பிறப்பிக்கிறார். தனது இறுதி மூச்சு வரை கொண்ட கொள்கையில் உறுதிபட செயல்பட்டவர் பெரியார் அவரது பாதையில் அனைத்து செயல்களிலும் பகுத்தறிவுடன் நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்.