Categories
உலக செய்திகள் பல்சுவை

“கொரோனா” மீண்டும்…. மீண்டும் வருமா….? முக்கிய தகவல்….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவருக்கு மறுபடியும்  கொரோனா தாங்குமா என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தற்போது வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக கேட்டு வரக்கூடிய ஒரு கேள்வி என்றால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு மீண்ட பின் அவருக்கு மறுபடியும் தொற்று ஏற்படுமா?  என்ற கேள்வி தான். இதற்கு அறிவியல் அறிஞர்களும் மருத்துவர்களும் விளக்கம் அளித்துள்ளனர். அதில், தற்போது 3 மாதகாலமாக மட்டுமே கொரோனா வைரஸுடன் நாம் பழகி வருகிறோம். அதனை ஆராய்ச்சி செய்து வருகிறோம் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதையும் தற்போது வெளியிட முடியாது. அதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சரியான பின் மீண்டும் அந்த நோய்  வருமா என்றால் ஜப்பானில் மற்றும் சீனாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் இது குறித்து நாம் பயப்படத் தேவையில்லை. இப்போதைய சூழ்நிலைக்கு நம்மை பாதுகாத்துக் கொள்வதே அவசியம். தற்போது உருவாகியுள்ள இந்த வைரஸ் மிகுந்ததாக பலம் பொருந்தியதாக இருக்கிறது. நாளுக்கு நாள் செல்லச்செல்ல ஒருவேளை வீரியம் குறைந்து அது சாதாரண கோல்டு அல்லது சாதாரண சளி இருமல் போன்ற வியாதியாக மாறிவிடும். இதற்கு முன் கொரோனா குடும்பத்தை சேர்ந்த மற்ற வைரஸ்கள் இது போல் மாறியதுண்டு. ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில் பொய்களை நம்பாமல் நம்மை வீட்டிலிருந்தே பாதுகாத்துக்கொள்வது தான் சிறந்தது என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |