பரியேறும் பெருமாள், சிகை, சத்ரு படங்களில் நடித்து பிரபலமாகி வரும் நடிகர் கதிர்,விஜயுடன் இணைந்து தளபதி 63 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.இதைதொடர்ந்து அறிமுக இயக்குநர் குமரன் இயக்காதில் கதிர் தற்போது ஜடா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். மேலும் ரோஷினி நாயகியாகவும், சமுத்திரக்கனி, யோகி பாபு, கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.இப்பசாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழகத்தில் வசித்து வரும் கால்பந்து விளையாட்டு வீரர் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை, சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை பேசுகிற படமாக உருவாகியுள்ளது.படப்பிடிப்பு முடிந்த நிலையில்,படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியிருப்பதாகவும். நடிகர் கதிர் தனது காட்சிகளுக்கான டப்பிங்கிற்காக பணியாற்றி வருகிறார்.என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.