பிரான்சில் சுகாதார அமைச்சகம் மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தி கொண்டவர்கள் மூன்றாவது டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டால் நல்லது என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வைப்பதே சில நாடுகளில் பெரும் சவாலாக இருக்கிறது. இந்த நிலையில் பிரான்சில் சுகாதார அமைச்சகம் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடர்பில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது பிரான்சில் கொரோனாவிற்கான மூன்றாவது தடுப்பூசி போட்டுக்கொள்ள 34 சதவீத மக்கள் மட்டுமே தகுதி உடையவர்களாக இருக்கின்றனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏனென்றால் ஆறு மாதங்களுக்கு முன்பு முதல் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே தற்போது மூன்றாவது டோஸ் தடுப்பூசியினை போட்டுக் கொள்ள இயலும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.