பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் எரிபொருள் நெருக்கடி குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்கள் பேட்டியளிப்பின் போது HGV மற்றும் எரிபொருள் நெருக்கடி கிறிஸ்துமஸ்-க்கு பிறகு நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பெட்ரோல் நிலையங்களில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய தொழிலாளர்கள் எரிபொருள் நிரப்புவதற்கு முன்னுரிமை வழங்கப்படாது. ஏனென்றால் தற்போது நிலைமை சீராக மாறியுள்ளதாக கூறியுள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் பிரதமர் போரிஸ் ஜான்சன் பெட்ரோல் ஸ்டேஷன்களில் கடந்த சில தினங்களாக அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகளின் நிலையை தற்போது புரிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் நிலைமை தற்போது மேம்பட தொடங்கியுள்ளதால் மீண்டும் பொருள்கள் சாதாரணமாக கிடைக்க தொடங்கும். அதேபோல் எரிபொருள் தொழிற்துறைகளிலிருந்தும் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
எனவே மக்கள் நிலைமை சீராகி வருவதால் நம்பிக்கையுடன் தொழிலை எப்போதும் போல் மேற்கொள்ளலாம் என்று போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையே எரிபொருளை மேலும் வழங்குவதற்கான அறிக்கையை அளிப்பதாக பெட்ரோல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் எரிபொருள் தொழில்துறையில் உள்ள உறுப்பினர்கள் எரிபொருள் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆரம்ப அறிகுறிகள் கிடைத்துள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.