Categories
டெக்னாலஜி

முக்கிய செய்தி: இன்று நள்ளிரவு முதல்…. வாட்ஸ்அப் இயங்காது…!!

வாட்ஸ் அப் செயலியானது இன்று நள்ளிரவிலிருந்து இயங்காது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப் என்பது ஆண்ட்ராய்டு மற்றும் பிற ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தும் ஒரு இலவசத் தகவல் பரிமாற்ற செயலி ஆகும். இதன் மூலமாக நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் தகவல்களைப் பரிமாறுவதற்கும், வீடியோ கால் செய்வதற்கும் கைபேசியின் இணைய இணைப்பை (4G/3G/2G/எட்ஜ் அல்லது வைஃபை கிடைப்பதைப் பொறுத்து) வாட்ஸ் அப் இயங்கும். இதன் மூலமாக மெசேஜ், அழைப்புகள், படங்கள், காணொலிகள், கோப்புகள் மற்றும் குரல் தகவல்களைப் பரிமாற்றம் செய்யலாம்.

இதனால், இந்த செயலிக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பு கிடைத்துள்ளது.  இந்நிலையில் iOS மற்றும் ஆண்ட்ராய்டு 4.0.3 ஆகியவற்றில் குறைவான இயங்கு தளங்களைக் கொண்ட ஸ்மார்ட் போன்களில் (இன்று நள்ளிரவில்) ஜனவரி 1-ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் செயலி இயங்காது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் இந்த இயங்குதளங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன் பயனர்கள் உடனடியாக தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள இயங்குதளத்தை அப்டேட் செய்ய வேண்டும். இல்லை என்றால் தற்போதுள்ள இயங்குதளங்களை கொண்ட ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

Categories

Tech |