வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக டெல்லி ஐகோர்ட்டில் இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை அடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நான்காம் கட்ட பொதுமுடக்க தளர்வு நாளை மறுநாள் முதல் அமலாகிறது. இதனிடையே கல்வி சார்ந்த, மாணவர்களின் தேர்வு சார்ந்த பல்வேறு அறிவிப்புகளையும் மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறும் இருக்கும் நீட் தேர்வை ஒத்திவைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து நீதிமன்றம் வரை சென்றுள்ளது. செப்டம்பரில் நடக்க உள்ள நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரிக்கை வலுத்து வரும் நிலையில் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அடுத்தாண்டு நீட் தேர்வு எழுதி தகுதி பெற அனுமதி அளித்துள்ளது.
வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக டெல்லி ஐகோர்ட்டில் இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.