பெண்கள் , குழந்தைகளுக்கு நஷ்ட ஈடு திட்டம் குறித்து தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி பயிற்சி அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட ஆணையர் குழு சார்பில் குற்ற சம்பவங்களில் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நஷ்ட ஈடு வழங்கும் திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமானது தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிமன்றத்தின் சமரச மையத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதி ஹேமா தலைமை தாங்கினார்.
மேலும் கூட்டத்தில் டிஎஸ்பி, எஸ்பி, இன்ஸ்பெக்டர், உள்ளிட்ட ஏராளமான காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பாலியல், ஆசிட் அடித்தல், உள்ளிட்ட குற்றச்செயல்களின் கீழ் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கான திட்டம் குறித்தும், திட்டப்படி உரிய நேரத்தில், அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கான பயிற்சி வகுப்பை நீதிபதி எடுத்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றங்கள் மூலமாகவும், சட்ட ஆணையர் குழு மூலமாகவும் நஷ்ட ஈட்டை உடனடியாக பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.