Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸ் கூப்பிடுறாங்க… செல்போனால் வந்த வீபரீதம்…! சென்னையில் நடந்த உயிரிழப்பு …!!

மின்சார ரயிலின் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்த பல பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள அமைந்தகரை பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்தார். இவர் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே கடந்த 7ஆம் தேதி மின்சார ரயில் மோதி அங்கு இறந்து கிடந்தார். இதனையடுத்து அவரது உடலை எழும்பூர் ரெயில்வே போலீசார் மீட்டு அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் லட்சுமணன் உபயோகித்து வந்த செல்போன் திருட்டு செல்போன் எனவும், அது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறி பேசின் பாலம் போலீசார் கடந்த 5- ம் தேதி லட்சுமணனை காவல் நிலையம் அழைத்துள்ளனர். அங்கு அவருடைய செல்போனை பறிமுதல் செய்த போலீசார், யாரிடமிருந்து அந்த செல்போன் வாங்கப்பட்டதோ, மறுநாள் மீண்டும் காவல் நிலையம் வந்து அவரை அடையாளம் காட்டு என கூறி இலட்சுமணனை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.  இதனையடுத்து ஒரு வக்கீலுடன் லட்சுமணனின் தந்தை காவல் நிலையம் சென்றுள்ளார்.

அப்போது லட்சுமணனை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க ரூபாய் 50 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என்று வக்கீல் கூறியதால் வீட்டிலுள்ள நகை அடகு வைத்து லட்சுமணனின் தந்தை வக்கீலிடம் பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை போலீசாரிடம் வக்கீல் ஒப்படைத்த பின், தொடர்ந்து மேற்கொண்டு பணம் வேண்டும் என்று சம்பந்தப்பட்ட போலீசார் தொந்தரவு செய்துள்ளனர். இதனால் லட்சுமணன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்கு ரயில்வே போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். மேலும் இவ்வழக்கு தொடர்பான நடவடிக்கையை உடனடியாக எடுக்க உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |