FIFA உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளது. சில முக்கிய வீரர்கள் இந்த ஆண்டு கால்பந்து போட்டியில் விளையாட போவதில்லை. FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022-ல் முக்கிய வீரர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.
ஏர்லின் ஹாலண்ட் – நார்வே
19 ஆவது வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகமான ஏர்லின் ஹாலண்ட் 23 போட்டிகளில் 21 கோல்களை அடித்துள்ளார். உலகக்கோப்பை தகுதி சுற்றில் ஹாலண்ட்டால் ஐந்து கோல்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் நார்வே 10 தகுதி போட்டிகளில் 18 புள்ளிகளை சேகரித்து நெதர்லாந்து மற்றும் துருக்கிக்கு பின்னால் மூன்றாவது இடத்தை பிடித்தது.
முகமது சாலா-எகிப்து
கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு தொலைக்காட்சி சேனலிடம் உலக கோப்பையின் போது நான் கத்தாரில் இருக்கலாம் என முகமது சாலா கூறினார். இவர் ஆங்கில பிரீமியர் லீக் கழகமான லிவர்பூல் அணியிலும் எகிப்திய தேசிய அணியிலும் முன்கள வீரராக விளையாடி வருகிறார். இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அவர் கலந்து கொள்ள மாட்டார். ஏனெனில் அவரது நாடு போட்டிக்கு தகுதி பெறவில்லை.
டேவிட் அலபா- ஆஸ்திரியா
டேவிட் அலபா இந்த ஆண்டின் தனது மூன்றாவது ஆஸ்திரிய விளையாட்டு ஆளுமை விருதை வென்றுள்ளார். கடந்த சகாப்தத்தில் ஆசிரியரின் சிறந்த கால்பந்து வீரராக இருந்தார். ஆனால் 2022 கால்பந்து போட்டியில் இவர் விளையாடப் போவதில்லை.
மார்ட்டின் ஒடேகார்ட்- நார்வே
தனது 15 வயதில் தொழில்முறை லீக்கில் மார்ட்டின் அறிமுகமானார். ஒரு நோர்வே தொழில்முறை கால்பந்து வீரர் ஆவார். இவர் சிறந்த இளம் திறமையாளர்களில் ஒருவராக கண்டறியப்பட்டார். இந்த கால்பந்து போட்டியில் இவர் கலந்து கொள்ளவில்லை.
லூயிஸ் டயர்ஸ்-கொலம்பியா
2021 கோபா அமெரிக்காவின் கூட்டு முன்னணி கோல் அடித்தவர் லூயிஸ் டயஸ். 2018-ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமானதிலிருந்து லூயிஸ் 37 போட்டிகளில் எட்டு கோல்களை அடித்துள்ளார். ஆனால் தரவரிசையில் கொலம்பியா 6-வது இடத்தை பிடித்தது இதனால் லூயிஸ் கத்தாரில் தனது திறமையை வெளிப்படுத்த இயலாது.