Categories
தேசிய செய்திகள்

“நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முக்கிய முடிவுகள்”…. பிரதமர் மோடி அதிரடி ஸ்பீச்….!!!!!

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலத் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் 29-ம் தேதி வரை 17 அமர்வுகள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் போது துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது மத்திய அரசானது 16 மசோதாகளை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது பிரதமர் மோடி பேசினார்.

அவர் பேசியதாவது, இந்தியா சுதந்திரமடைந்த 75 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதால் நாம் இன்று அமிர்தகால பயணத்தை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ள நிலையில், இந்தியாவின் பெருமையை உலக அளவில் பறைசாற்ற வேண்டும். நான் அண்மையில் அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் அது தற்போது நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதற்கான முக்கிய முடிவுகள் மற்றும் திட்டங்கள் இந்த கூட்டத்தில் கொண்டுவரப்படும். அதன் பிறகு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் விவாதத்தில் கலந்து கொண்டு தங்களுடைய கருத்தை தெரிவித்தால் தான் பொதுமக்களுக்கு நல்ல திட்டங்கள் சென்றடையும். அதன் பிறகு நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றுள்ள இளம் எம்பிக்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

ஏனெனில் இவர்கள்தான் இந்தியாவின் நாளைய தலைமுறை என்பதால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களையும் விவாதத்தில் பெரும் அளவு பங்கேற்க வைக்க வேண்டும். கடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பல தங்களுடைய கருத்துக்களை சொல்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று புகார் தெரிவித்திருந்தனர். ஆனால் அனைத்து கட்சி தலைவர்களும் விவாதத்தில் கலந்து கொண்டால் தான் மாற்று மக்களுக்கு செய்ய முடியும் என்பதால் அனைவருக்கும் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |