Categories
மாநில செய்திகள்

“ஹிந்தி மொழி திணிப்பு” நேரடியாக களத்தில் இறங்கிய உதயநிதி….. அக். 15-ல் பெரிய சம்பவம் இருக்கு….!!!!

தமிழகத்தில் மறைமுகமாக இந்தி மொழி திணிக்கப்படுவதாக திமுக, விசிக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது. அதன் பிறகு மத்திய அரசின் கல்வி பணியிடங்கள் உட்பட பல்வேறு இடங்களில் ஹிந்தி மொழி கட்டாயமாகப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. சமீபத்தில் கூட ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியை கற்பிப்பதற்கு உள்துறை அமைச்சர் தலைமையிலான குழு பரிந்துரை செய்தது.

இதனால் மத்திய அரசு ஹிந்தி மொழியை மட்டுமே வளர்க்க முயற்சி செய்வதாகவும், மற்ற மொழிகளை புறக்கணிப்பதாகவும் பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றசாட்டுகள் முன் வைக்கப் பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் திமுக உட்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் ஹிந்தி மொழி திணிப்புக்கு கண்டனம் தெரிவித்து திமுக கட்சியின் இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வருகிற 15-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களின் சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |