Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எவ்ளோ முயற்சி பண்ணியும் முடியல… கைதி எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் உறவினர்கள்…!!

போக்சோ சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செண்பகாதேவி பகுதியில் அசோக் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் வசித்து வரும் 17 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக இவரை அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து விட்டனர். அதன்பின் இவர் சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அசோக்குமார் பலமுறை ஜாமீன் கேட்டும் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதனால் தான் அணிந்திருந்த லுங்கியில் அசோக்குமார் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்ட அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து உடனடியாக சிறை ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் அதிகாரிகள் அவரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |