குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரிய மாதா சர்ச் தெருவில் கிளின்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாமுவேல் புரத்தில் வசித்து வரும் அந்தோணி ராஜ் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து கொலை செய்துவிட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தாளமுத்து நகர் போலீசார் குற்றவாளிகளான 3 பேரையும் கைது செய்து விட்டனர்.
அதன்பின் தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அந்தோணிராஜ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் அந்தோணி ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் அந்தோணியை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்து விட்டனர்.