பாறை சரிவு ஏற்பட்ட கல்குவாரியில் மேற்பார்வையாளராக பணியாற்றிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்தில் கடந்த 4 ஆம் தேதி உள்ள தனியார் கல்குவாரியில் பாறை சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதனை அடுத்து மீட்பு படையினர் அந்த பாறை இடுக்குகளில் சிக்கிய 9 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.
இதில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வடமாநிலத்தை சேர்ந்த சோனா அன்சாரி என்பவர் உயிரிழந்த நிலையில், சுரேஷ் என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் கல்குவாரியின் மேற்பார்வையாளரான சுரேஷ் என்பவரையும், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஏலக்காய் மங்கலம் பகுதியில் வசித்து வரும் மேஸ்திரி வேலு என்பவர்களையும் சாலவாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.