Categories
உலக செய்திகள்

வெளிநாட்டு திரைப்படம் பார்த்தால் மரணம் உறுதி..! பிரபல நாட்டில் உள்ள சட்டத்தால்… தவிக்கும் மக்கள்..!!

வெளிநாட்டு திரைப்படங்களை பார்பவர்களுக்கு வடகொரியாவில் மிகக் கொடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.

வட கொரியாவில் அரசு என்ன சொல்கிறதோ அதன்படி தான் மக்கள் நடக்க வேண்டும் அதை மீறினால் மரணத் தண்டனை மட்டுமே வழங்கப்படும். அந்த வகையில் சமீபத்தில் தென்கொரிய நாட்டின் திரைப்படங்கள் அடங்கிய வீடியோக்களை வடகொரியாவில் விற்பனை செய்த இளைஞர் ஒருவருக்கு அந்நாட்டு அரசு 500 பேருக்கு மத்தியில் மரண தண்டனை வழங்கியுள்ளது. மேலும் வட கொரிய மக்கள் வெளியுலகத் தொடர்பே இல்லாமல் வாழ்ந்து வரும் நிலையில் அவ்வப்போது சீன எல்லையிலிருந்து வடகொரிய அரசுக்கு தெரியாமல் சிடிக்கள் கடத்தி வரப்பட்டு அதன்மூலம் திரைப்படங்களை மக்கள் கண்டுகளித்து வந்துள்ளனர்.

ஆனால் வடகொரிய அரசு இவ்வாறு நாட்டு மக்கள் தொடர்ந்து வெளிநாட்டு திரைப்படங்களை பார்த்தால் அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவார்கள் என்ற அச்சத்தில் வெளிநாட்டு படங்களை பரப்புபவர்கள், காண்பவர்கள் மற்றும் விற்பவர்களுக்கு கிம் ஜாங் உன் அரசு கடும் தண்டனை வழங்கி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் வெளிநாட்டு படங்களை பார்ப்பவர்களுக்கு 15 வருடங்கள் சிறை தண்டனையும், வெளிநாட்டு படங்களை கடத்தி வருபவர்களுக்கு மரண தண்டனையும் வழங்க கிம் ஜாங் உன் அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது.

அந்த சட்டத்தின்படியே தென்கொரிய நாட்டின் படங்கள் அடங்கிய வீடியோக்களை விற்பனை செய்த வடகொரிய இளைஞரான லீ என்பவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் வெளிநாட்டு ஆடைகளை அணிபவர்கள், வெளிநாட்டு மொழி பேசுபவர், வெளிநாட்டவரை போல சிகை அலங்காரம் வைத்திருப்போர் அனைவரும் சமூக விரோதிகளாக கருதப்படுவர் என்று அண்மையில் கட்சி இளைஞர் அமைப்புக்கு எழுதிய கடிதத்தில் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளது.

தற்போது கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக வடகொரிய அரசு சீனாவுடனான எல்லையையும் மூடியுள்ளதால் அந்நாட்டு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால் வடகொரிய அரசோ பஞ்சத்தில் தவிக்கும் நாட்டு மக்களை பற்றி எந்தவித கவலையும் கொள்ளாமல் அவர்களின் அறிவு விரிவடைந்து விடக் கூடாது என்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருவது பெரும் வேதனையை அளிக்கும் விதமாக உள்ளது.

Categories

Tech |