Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உரிமையை ஏன் விட்டு கொடுத்தீங்க…. சிறை கைதிகளின் முடிவு…. வெளியான பரபரப்பு தகவல்….!!

திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள 21 கைதிகள் தபால் ஓட்டு போட விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என மொத்தம் 1, 500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்கு விசாரணைக் கைதிகளுக்கோ அல்லது தண்டனை கைதிகளுக்கோ அனுமதி கிடையாது. ஆனால் இதற்கு மாறாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மட்டும் ஓட்டு போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அந்த கைதிகளுக்கு மற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கக் கூடாது என்பது நிபந்தனையாகும். இந்நிலையில் திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்ட 210 கைதிகளில், 21 கைதிகளுக்கு மட்டுமே தபால் ஓட்டு போட தகுதி உள்ளது. இதனை அடுத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தாங்கள் தபால் ஓட்டு போட விரும்பவில்லை என அந்த 21 கைதிகளும் தெரிவித்துள்ளதாக திருச்சி மத்திய சிறைசாலை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |