Categories
தேசிய செய்திகள்

மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும்… பீட்டர் அல்போன்ஸ் கருத்து…!!

நாடு முழுவதும் மருத்துவ வசதிகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் மழை காரணமாக மக்கள் மிகுந்த மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால் பல மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இரண்டாம் நஅலை மோசமாக இருந்த சமயத்தில் பல மாநிலங்களில் படுக்கை வசதி, ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி பற்றாக்குறையில் போன்ற பல பிரச்சனைகள் இருந்து வந்தது.

எனவே மூன்றாம் அலை வர உள்ளதால் ஒன்றிய அரசும், மாநில அரசும் பிற செலவுகளை தவிர்த்து மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “கொரோனா மருத்துவ செலவினால் 6 கோடி இந்தியர்கள் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 60 சதவீத மக்கள் சிகிச்சைக்கு தங்கள் சொந்த பணத்தை செலவிட்டுள்ளனர். மூன்றாம் அலை வருவதற்கு முன்பாக ஒன்றிய மாநில அரசுகள் மற்ற செலவினங்களை தவிர்த்து ஏழை மக்களின் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்

Categories

Tech |