Categories
அரசியல் மாநில செய்திகள்

38,000 அரசு பள்ளியை மேம்படுத்துங்க…. ரூ.7,500,00,00,000 ஒதுக்கீடு… கலக்கிய தமிழக முதல்வர்!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2018 ஆம் ஆண்டு நடந்த ஈரோட்டு மாநாட்டில் நம்முடைய இனமான பேராசிரியர் அவர்கள் உரையாற்றும் போது சொன்னார்கள்…  திராவிட இயக்கத்தை வழிநடத்தக்கூடிய ஆற்றல் யாருக்கு உள்ளது என்று சொன்னால் ?

நம்முடைய தளபதி அவருடைய பெயரை சொல்லி இவருக்கு தான் அந்த ஆற்றல் உண்டு, அது மட்டுமல்ல அதற்கான போர்க்களத்தை முன்னெடுக்கக்கூடிய இந்த ஆற்றல் பெற்றவர் என்று நம்முடைய முதலமைச்சரின் பெயரை எடுத்துச் சொன்னார்கள்.

2017 ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் தேதி அன்று நம்முடைய இயக்கத்தினுடைய தலைவரை செயல் தலைவராக அன்றைக்கு முன்மொழிந்தவர் யார் என்று சொன்னால் ? இனமான பேராசிரியர் அவர்கள் தான். அதேபோன்று 2018 ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நம்மை விட்டு பிரிந்த பிறகு,  இயக்கத்தினுடைய இதயமாக இருக்கின்ற பொதுக்குழுவிலே…

இயக்கத்தினுடைய தலைவராக நம்முடைய தளபதியை முன்மொழிந்தது யார் ? என்று சொன்னால்,  நம்முடைய இனமான பேராசிரியர் அவர்கள் தான். அந்த பெருமையோடு இன்றைக்கு அவரிடரின் புகழை நாம் பாடிக் கொண்டிருக்கின்றோம். எங்களுக்கான பெருமை அந்த 2018 ஆம் ஆண்டு நடந்த மாநாட்டிலே…  எனக்கும் உரையாற்றுகின்ற அந்த வாய்ப்பு கிடைத்தது என்பதை என்னுடைய வாழ்நாள் பெருமையாக நான் கருதினேன் என்பதை இந்த மேடையில் நான் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கின்றேன்.

அப்படி நம்முடைய இனமான பேராசிரியர் அவர்களுடைய புகழை போற்றுகின்ற வண்ணம் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு நம்முடைய கல்வி வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்கின்ற பெயரைச் சூட்டி இருக்கின்றார்.  அது நமக்கான பெருமை. 38 ஆயிரம் அரசு பள்ளிகள் இருக்கிறது.

அவற்றையெல்லாம் மேம்படுத்துவதற்காக பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் என்று ஏறத்தாழ 7500 கோடி ரூபாய் அடுத்த ஐந்து வருடத்தில் ஒதுக்கப்படும் என்று சொல்லி, இந்த ஆண்டு அதற்காக 1400 கோடி ரூபாய் ஒதுக்கியவர் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் என்று சொல்லும்போது உங்களோடு சேர்ந்து நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு…  துறையின் அமைச்சர் என்கின்ற முறையில் கோடான கோடி நன்றியை சொல்ல நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.

தொடர்ந்து இனமான பேராசிரியர் உடைய புகழை போற்றுகின்ற வண்ணம் அவருக்கு…. ஏனென்றால் அவர் நிதி அமைச்சராக இருந்தபோதுதான்,  ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு என்று நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறிவித்த போது… அதற்கான கையெழுத்திட்டவர் அவர்தான். அவர் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது ஒரு கிலோமீட்டருக்கு ஒரு ஆரம்ப பள்ளி இருக்க வேண்டும் என்கின்ற அந்த அறிவிப்பை கொண்டு வந்ததும் அவர்தான் என்று தொடர்ந்து அவருடைய புகழை நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருக்கலாம்.

அந்த வகையில் நம்முடைய இனமான பேராசிரியர் அவர்கள் புகழை உங்களோடு சேர்ந்து நானும் அந்த புகழை உரையாற்றுகின்ற அந்த வாய்ப்பை பெற்றமைக்கு மீண்டும் ஒருமுறை இந்த மாவட்ட கழகத்திற்கு என்னுடைய நன்றியை சொல்லிக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |