Categories
பல்சுவை

வங்கிகளின் செயல்படாத சொத்துகளில் முன்னேற்றம்: எஸ்.பி.ஐ. தலைவர்

வங்கிகளின் செயல்படாத சொத்துகளில் (Non-performing asset – NPA) முன்னேற்றம் இருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) தலைவர் ரஜ்னீஷ் குமார் (Rajnish Kumar) கூறினார்.

பாரத ஸ்டேட் வங்கித் (SBI) தலைவர் ரஜ்னீஷ் குமார் (Rajnish Kumar) டெல்லியில் இன்று (டிச21) நடந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்க கூட்டமைப்பின் 92ஆவது ஆண்டு கூட்டத்தில் பேசும்போது, “வங்கிகளுக்கு பெரும் அழுத்தம், தலைவலியை கொடுக்கும் செயல்படாத சொத்துகள் குறைந்து வருகிறது. அது தொடர்பான நடவடிக்கைகளில் முன்னேற்றம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

மேலும் பணப் பஞ்சம் தொடர்கிறது என்ற கருத்தை அவர் திட்டவட்டமாக மறுத்தார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “இந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரையிலான கணக்கெடுப்பின்படி, வங்கிகளின் செயல்படாத சொத்துகள் (NPA) விவகாரத்தில் முன்னேற்றம் இருக்கிறது.

Banking industry's NPA situation to improve by fiscal-end: SBI chairman  Banking industry's NPA situation  SBI chairman Rajnish Kumar

வங்கிகளுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லை உள்ளது. அதற்கு அப்பால் வங்கிகளால் செயல்பட முடியாது. வட்டி வீதங்களைப் பொறுத்தமட்டில் வங்கிகள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் குறைக்க முடியாது.

பெருநிறுவனங்களின் சேமிப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு வங்கிகளுக்கு கிடைக்கவில்லை. இதனால் வங்களில் மூலதனப் பற்றாக்குறை காணப்படுகிறது. தற்போதைய சூழலில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடன்கள் வழங்குவது பாதுகாப்பற்றது. பொதுவாக வங்கிகள் கடன் வழங்குவதற்கு முன்னர் கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். ஏனெனில் அதீத இடர்பாடுகள் உள்ளன” என்றார்.

Categories

Tech |