பாகிஸ்தான் கராச்சியில் நடந்த தாக்குதலுக்கு இந்தியா தான் முழு காரணம் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்
கடந்த திங்களன்று பாகிஸ்தான் கராச்சி நகரில் இருக்கும் பங்குச்சந்தை கட்டிடத்திற்குள் பயங்கரவாதிகள் நான்கு பேர் ஆயுதங்களுடன் நுழைய முயற்சி செய்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அவர்களது அந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். பின்னர் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதிகள் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து நேற்று முன்தினம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரோஷி கூறுகையில், “கராச்சி பங்குச்சந்தையில் நடைபெற்ற தாக்குதலுக்கு இந்தியாவின் ஸ்லீப்பர் செல்ஸ்களே முக்கிய காரணம்” எனக் கூறி இருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசிய இம்ரான்கான், “கராச்சி தாக்குதலுக்கு பின்னால் இந்தியா தான் இருக்கின்றது என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. பங்குச்சந்தை கட்டிடத்தின் உள்ளே நுழைவதற்கு முன்பே நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் இது மாபெரும் வெற்றி” எனக் கூறியுள்ளார்.