பாகிஸ்தானின் இம்ரான் கானுக்கு எதிரான தீர்மானத்திற்கு இன்று எதிர்க்கட்சி தலைவர் தாக்கல் செய்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார வீழ்ச்சி மற்றும் கடன் சுமையில் தவித்து வருகிறது. பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான் கானின் தவறான கொள்கைகளே காரணம் என்று குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய திட்டமிட்டன. இதற்கிடையில் இம்ரான் கானின் சொந்த கட்சி உறுப்பினர்களே நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வாக்களிக்கும் நிலையில் இம்ரான் கானின் அரசு கவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் இம்ரான் கானுக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்திற்கு ஆதரவளித்து 161 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது. “இந்த தீர்மானம் மீதான விவாதம் மார்ச் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. பின்பு தீர்மானத்தின் வாக்கெடுப்பு விடப்படும். இதனை தொடர்ந்து இம்ரான்கான் இந்த பதவியில் நீடிப்பாரா இல்லை அவரது ஆட்சி கவிழுமா என்பது அந்த சமயத்தில் தெரிந்துவிடும்”.