பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், பேரணி நடத்திய போது துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி வரிசாபாத் நகரத்தில் தன் தலைமையில் பேரணி நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அதில், இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்து விட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரோடு சேர்ந்து பி.டி.ஐ கட்சியின் முன்னாள் தலைவர்கள் நான்கு பேர் காயமடைந்திருக்கிறார்கள். துப்பாக்கிசூடு தாக்குதல் மேற்கொண்ட நபர் தற்போது கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.