செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் நம்முடைய தமிழக அரசுக்கு சொந்தமான நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் நம்முடைய மின்வாரியத்திற்கு சொந்தமான இடங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 100 இடங்களில் மின்சார வாகனத்தின் சார்ஜிங் சென்டர் அமைப்பதற்கான இடங்கள் வந்து இறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கான மதிப்பீடுகள் இப்போது தயார் செய்யப்பட்டு வருகிறது, மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்ட பிறகு மாண்புமிகு முதலமைச்சர் உடைய உத்தரவின் படி அந்த பணிகள் தொடங்கப்படும். முதல் கட்டமாக 100 இடங்களில் அதற்கான மையங்கள் அமைப்பதற்கான தயார் செய்யப்படுகின்றது.
நிதி ஒதுக்கீட்டிற்கு பிறகு, டெண்டர் விட வேண்டும். டெண்டர் தேதி தெரியாமல் அதனுடைய ஒப்பந்த காலம் தெரியாமல் என்னால் சொல்ல முடியாது. டெண்டர் முடிந்த பிறகு அதன் கால அவகாசத்தை பற்றி நான் கூறுகிறேன் என தெரிவித்தார்.