தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருக்கும் நிலையில் 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. வரும் 28-ம் தேதியை ஒட்டி வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டு இருக்கும் நிலையில் தற்போது நிலவி வரக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற 26, 27, 28 இந்த மூன்று நாட்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இந்த மூன்று நாட்களுக்கும் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரைக்கும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சொல்லப்பட்டுள்ளது.